குடிநீர் குழாய் உடைப்பு - நகர்மன்ற தலைவர் ஆய்வு

குடிநீர் குழாய் உடைப்பு - நகர்மன்ற தலைவர் ஆய்வு

நகராட்சி தலைவர்  ஆய்வு 

மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியில் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை சிவகங்கை நகராட்சி தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.

சிவகங்கை நகராட்சியில் கோடை காலம் துவங்கிய நிலையில் தண்ணீர் பஞ்சம் நிகழ்வதால் பொதுமக்கள் அவதிப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு நகராட்சி சார்பில் 90 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். மருது பாண்டியர் நகர், மதுரை ரோடு, காளவாசல், அம்பேத்கர் தெரு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மேல் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இடைக்காட்டூர் வைகை ஆற்று குடிநீர், திருச்சி காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் சிவகங்கை மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இடைக்காட்டூர் வைகை ஆற்று பகுதியில் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து விடுவதாலும், காவிரி கூட்டு குடிநீர் முறையாக வழங்காததாலும் நகரில் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், வாரத்திற்கு ஒரு முறையும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கோடை ஆரம்பித்து விட்டதால் தண்ணீரின் தேவை அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களாகவே நகராட்சியில் உள் பல பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தண்ணீர் கேன் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி கண்காணிப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், நகருக்கு தேவையான தண்ணீரை வழங்க முயற்சி செய்து வருகிறோம். இடைக்காட்டூரில் குழாய் உடைந்துள்ளது. அதை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் தண்ணீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனைடியாக சரி செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

Tags

Next Story