காஞ்சியில் மாசடையும் குடிநீர்

காஞ்சியில் மாசடையும் குடிநீர்

குடிநீர் மாசு

ஆழ்துளை குழாய் அமைந்துள்ள 'மேன்ஹோல்' தொட்டியைமுறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் மண்டியுள்ளன

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை, எம்.ஜி.ஆர்., நகர் ஒட்டியுள்ள கன்னியம்மாள் நகர் பிரதான சாலையோரம். காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை குழாயில் இருந்து எல்லப்பா நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கன்னியம்மாள் நகரில் ஆழ்துளை குழாய் அமைந்துள்ள 'மேன்ஹோல்' தொட்டியைமுறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் மண்டியுள்ளன. அதில், தேங்கியுள்ள மழைநீர் சகதிநீராக மாறியுள்ளது. இதனால், ஆழ்துளை குழாய்க்குள் சகதிநீர் சென்றால், குடிநீர் மாசடைந்து, இந்நீரை பயன்படுத்துவோருக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட உடல் உபாதை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓரிக்கை கன்னியம்மாள் நகரில், ஆழ்துளை குழாய் அமைந்துள்ள 'மேன்ஹோல்' சிமென்ட் தொட்டியில் தேங்கியுள்ள சகதிநீரையும், செடி, கொடிகளையும் அகற்றி, ஆழ்துளை அமைந்துள்ள பகுதியை மூடி பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story