ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி - இடித்து அகற்றிய அதிகாரிகள்

ஆபத்தான நிலையில் குடிநீர் தொட்டி -  இடித்து அகற்றிய அதிகாரிகள்

குடிநீர் தொட்டி இடித்து அகற்றம் 

காஞ்சிபுரம் அடுத்த, ஒழக்கோல்பட்டு கிராமத்தில், ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பில்லர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிப்பாகம் ஆகியவை சேதம் அடைந்த நிலையில் இருந்தன. சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, வட்டார வளர்ச்சி நிர்வாகம் கடந்த மாதம் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றுவதற்கு அனுமதி அளித்தது. கடந்த இரு தினங்களாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கட்டடம் உடைக்கும் இயந்திரத்தின் வாயிலாக உடைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ''ஜல் ஜீவன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ''சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இனி அப்பகுதியில் விபத்து அபாயம் இருக்காது,'' என்றனர்.

Tags

Next Story