பேராவூரணி அருகே விஷம் அருந்தி ஓட்டுநர் தற்கொலை

பேராவூரணி அருகே விஷம் அருந்தி ஓட்டுநர் தற்கொலை

தற்கொலை

பேராவூரணி அருகே வாகன ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பொக்கன் விடுதி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு விவசாயி. இவரது மகன் கருணாகரன் ( வயது 46). இவர் திருச்சிற்றம்பலம் செருவாவிடுதி சாலையில் இயங்கி வந்த காய்கறிகள் மொத்த வியாபாரக் கடை ஒன்றில் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். தற்போது அந்த கடை இயங்கவில்லை.

இந்த நிலையில், அந்த கடையின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் விஷம் அருந்தி கருணாகரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அங்கேயே மருத்துவ குழுவினர், உடற்கூறாய்வு பரிசோதனை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து இறந்த கருணாகரனின் தம்பி தினகரன் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story