சிவகாசி அருகே டிரைவர் தற்கொலை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலை சேர்ந்த டிரைவர் சோலை மோகன்ராஜ் (58), கடன் சுமை காரணமாக விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் விஸ்வகர்மா நகரை சேர்ந்தவர் சோலை மோகன்ராஜ்(58). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார்.குடும்பத் தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டபட்டுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த சோலைமோகன்ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story