படுக்கையறையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், படுக்கையறையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமரி மாவட்டம் , பூதப்பாண்டி அடுத்த அழகிய பாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (36) டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி,மகள் உள்ளனர். மகள் அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பிரதீப் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். இரவில் அனைவரும் தூங்கிய பிறகு பிரதீப் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று பிரதீப் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறு காரணமாக பிரதீப் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story