ஓட்டுனர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஓமலூர் அருகே தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பழைய காலனி பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவருடைய மகன் வேல்முருகன் இவருக்கு பூமிகா என்ற மனைவியும் தேஷாஸ்ரீ என்ற மகளும் உள்ள நிலையில் இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த 26ஆம் தேதி காலை முதல் வீட்டை வெளியேறிய நிலையில் மூன்று நாட்களாக வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதையடுத்து ஓட்டுநரின் உறவினர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெள்ளாளப்பட்டியில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ஒரு விவசாய கிணற்றில் அவர் பிணமாக கிடைப்பதாக கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மணி மற்றும் மாநகர காவல் உதவி கமிஷனர் நிலவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்பு சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த பிறகு தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி அழுகிய நிலையில் கிடந்த ஓட்டுநர் வேல்முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தினர். ஓமலூர் அருகே தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story