மயங்கி விழுந்து டிரைவர் சாவு

மயங்கி விழுந்து டிரைவர் சாவு

டிரைவர் சாவு

வெயிலின் தாக்கத்தால் ஆரணி நகராட்சி குப்பை வண்டி டிரைவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை (வயது 55), நகராட்சியில் குப்பை வண்டி டிரைவராக வேலை செய்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தால் மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அவரை சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story