பள்ளி பேருந்து விபத்தில் டிரைவர் பலி

பள்ளி பேருந்து விபத்தில் டிரைவர் பலி

  பழவேலி தனியார் பள்ளியின் பேருந்து மாலை மாணவர்களை வீட்டில் இறந்த சென்றபோது, எதிர்பாராமல் நடந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார். 

பழவேலி தனியார் பள்ளியின் பேருந்து மாலை மாணவர்களை வீட்டில் இறந்த சென்றபோது, எதிர்பாராமல் நடந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளை செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகளை தினந்தோறும் பள்ளிக்கு ஏற்றிச்செல்வதும் பள்ளி முடிந்து வீட்டிற்கு கொண்டு வந்து விடுவதும் வழக்கம். செங்கல்பட்டு அழகேசன் நகர், இராட்டினங்கிணறு ஆகிய பகுதிகளில் இருந்து பத்து மாணவ-மாணவிகளுடன் வ.ஊ.சி நகர் பகுதியில் உள்ள மாணவர்களை ஏற்றி செல்வதற்காக சென்ற போது பேருந்தை ஓட்டிச்சென்ற செங்கல்பட்டு அடுத்த பி.வி. களத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் என்பவர் மயக்கம் அடைந்ததால் பள்ளி வாகனம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மதில் சுவர் மீது மோதியது.

மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர். மாணவ மாணவிகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர். ஆனால் ஓட்டுனர் வேல்முருகன் வாகனம் மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Tags

Next Story