விக்கிரவாண்டி அருகே லாரி மோதி டிரைவர் பலி !!

X
பலி
King 24x7 News Content (An) |29 May 2024 5:44 PM ISTவிக்கிரவாண்டி அருகே லாரி மோதி டிரைவர் பலி - போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பாதிராபு லியூரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 37). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு திருக்கனூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ராதாபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமம்டைந்த தாமோதரன் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்து விட்டார், இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் அவரது மனைவி சுகந்தி அளித்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
