டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை
X

பைல் படம்

சேலம் அருகே கடன் தொல்லை தாங்க முடியாத நிலையில் டிரைவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள வெள்ளாளபுரம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செல்வகுமார் (37), டெம்போ டிரைவர். இவர் சொந்த வீடு கட்டுவதற்காக சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகையை செலுத்த முடியாமல், வீட்டில் புலம்பி வந்துள்ளார். இச்சூழலில் அவரது மனைவியும் இறந்து போனதால், மனைமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிற்குள் செல்வகுமார், சேலையால் தூக்கு மாட்டிக்கொண்டுள்ளார். இதனை பார்த்த தாய் மாரியம்மன், உறவினர்கள் மூலம் மீட்டுள்ளார். அப்போது அவர், இறந்திருந்தது தெரியவந்தது. இது பற்றி தேவூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடம்வந்து விசாரணை நடத்தி, சடலத்தை கைப்பற்றினர். தொடர்ந்து டிரைவர் செல்வகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story