போலீசாரை தாக்கிய டிரைவர் கைது

போலீசாரை தாக்கிய டிரைவர் கைது

கைதானவர் 

ஜோலார்பேட்டை அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடன நாட்டியா நிகழ்ச்சியில் போலீசாரை தாக்கிய டிரைவர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜோலார்பேட்டை அடுத்த திரியாலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆலயத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது கோவில் நிறைவு விழா முன்னிட்டு நேற்று இரவு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மைதானத்தில் நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது நடன நாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் கலந்து சென்றனர்.

அப்போது நான்கு பேர் வீட்டிற்கு செல்லாமல் மது போதையில் இருந்தன இவர்களை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலிஷ் கணேசன் இவர்களை வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அப்போது இது எங்க ஊர் நாங்கள் எப்போது வேண்டுமானாலும் போவேம் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இதனை போலிசார் கணேசன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் ஏன் எங்களை வீடியோ எடுக்கிறாய் என கேட்டு தகராறு செய்து போலீசாரின் செல்போன் கீழே தள்ளினார். மேலும் கோவிந்தராஜ் போலீசாரின் சட்டை பிடித்த கீழே தள்ளி கையால் தாக்கியுள்ளார்.

இதனால் போலீசார் கணேசன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜ் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவிந்தராஜ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஜோலார்பேட்டை நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. குறிப்பாக ஒரே நாளில் 3 நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story