டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

டிரைவர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

பைல் படம் 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே சத்திரம் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த டிரைவரின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே சத்திரம் சாலையில்நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்த டிரைவர் பழனிவேல் (53) என்பது தெரியவந்தது. ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து பழனிவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story