பள்ளிப்பாளையத்தில் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க டிரைவர்கள் மனு !
மனு
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்டோ ஸ்டாண்டு அமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த டிரைவர்கள்.
பள்ளிப்பாளையத்தில், அண்ணா ஆட்டோ சங்கத்தினர், ஸ்டாண்ட் அமைக்க இடம் கேட்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; பள்ளிபாளையம்- சங்ககிரி சாலை கிருஷ்ணா மருத்துவமனை அருகில் 25 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. மேம்பாலம் கீழ் நடைபாதை சாலை விரிவாக்கம் செய்ய உள்ளார்கள். அவ்வாறு திட்டு அமைத்துவிட்டால் எங்கள் ஆட்டோக்கள் நிறுத்த இடம் இல்லாத சூழல் ஏற்படும், ஏற்கனவே அரசு இலவச பேருந்து விட்டதில் இருந்து வாழ்வாதாரம் இழந்து மிகவும் வேதனையில் உள்ளோம். இந்த சூழ்நிலையில் ஆட்டோ நிறுத்த இடமும் இல்லாமல் போனால் எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். எனவே, கிருஷ்ணா மருத்துவமனை அருகில் சாலையின் நடுவில் இரண்டு தூண்களுக்கு மட்டும் திட்டு கட்டாமல் காலியாக விடச்சொல்லி பரிந்துரை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
Next Story