அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

அரசு பள்ளியில் ஆய்வு

அருமனை அரசு பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

தமிழக முழுவதும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அதேபோன்று அருமனை அரசு மேல்நிலைப்

பள்ளியில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. இங்கு மாணவர்களிடம் ரூ.100 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.

அவரிடம் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறும்போது, 'அருமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானபடி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக தேர்வுக்கான பேப்பர், அரசின் கொடிநாள் வசூல், மாணவர்களுக்கான அடையாள அட்டை வழங்குவது போன்றவற்றுக்காக மொத்தமாக பணம் வசூலிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளான கழிவறை, துப்புரவு, குடிநீர் வினியோகம், இரவு நேர காவலர் நியமித்தல் போன்ற செலவுகளை சமாளிப்பதற்காக கூடுதல் கட்டணம் பயன்படுத்தப்படுகிறது' என்றனர்.

அத்துடன் அதற்கான ஆவணங்களை காட்டினர். அதிகாரி திடீரென விசாரணை நடத்த வந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story