பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்கள்
வெள்ளியங்கிரியில் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தி உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வெள்ளியங்கிரியில் பக்தர்களை கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தி உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கோவை:தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் 3 மாதங்கள் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டத்தில் குறிப்பாக சிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்வர்.இந்த ஆண்டு சீசனில் மலை ஏறிய ஐந்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்து விட்டனர். இதனை அடுத்து 5.5 கிலோ மீட்டர் மலை பாதையில் மருத்துவ முகாம்களை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளனர்.இந்த நிலையில் நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பக்தர்களை கண்காணிக்கவும் கடும் வெயில் நிலவுவதால் காட்டு தீ ஏற்படுவதை முன்கூட்டியே கண்காணிக்கவும் வனத்துறை சார்பில் வாங்கப்பட்டுள்ள டிரோன்களை கொண்டு கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனில் அதிகபட்சமாக 10 கிலோ எடை கொண்ட பொருள்கள் வரை எடுத்துச் செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்கான பொருள்கள் கொண்டு செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
Next Story