மீண்டும் பள்ளிக்கு செல்லும் படிப்பை கைவிட்ட மாணவர்கள்
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவர்களை கள ஆய்வு செய்ததில் இரண்டு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர்வதற்காக மீண்டும் பள்ளியில் சேர்ந்தனர்.
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி மேற்பார்வையில் மனித வர்த்தக மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் குழு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பள்ளி படிப்பை இடைநிறுத்தல் செய்த 15 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு பள்ளி படிப்பு குறித்து அறிவுரை கூறப்பட்டது. இதை அடுத்து அறிவுரை ஏற்ற இரண்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர மீண்டும் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
Next Story