நீரில் மூழ்கிய வாலிபர்: உடல் இரண்டு நாட்களுக்கு பிறகு மீட்பு
சென்னை, காட்டுபாக்கம், ஜான்சி நகர் பகுதியை சேர்ந்த தேவ கணபதி என்பவர் B.Sc படித்து முடித்துவிட்டு சென்னை காட்டுப்பாக்கம் அருகில் உள்ள கொரியர் டெலிவரி வேலை செய்து வருகிறார் . இந்நிலையில் ஆட்டுப்புத்தூரில் வசிக்கும் அவரது சித்தப்பா நித்தியானந்தம் வீட்டிற்கு தேவகணபதி வந்துள்ளார்.
நேற்று அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் என்பருடன், ஆட்டுப்புத்தூர் ஏரிக்கரைக்கு சென்று அங்கு கரையில் அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் நின்று நிலையில் , தேவகணபதி ஏரியில் குளிக்க சற்று தூரமாக சென்றதாகவும் பின்பு நீரில் மூழ்கி வெளியே வராததால் அவரது சித்தப்பா மகன் நிமலாநந்தன் அவரது அப்பா நித்தியானந்தத்திற்கு போன் செய்து உடனே அங்கு வந்து தேடினர். இது குறித்து காவல்துறைக்கும் மற்றும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தேடி வந்தபோது போதிய வெளிச்சம் இன்மை காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு
மீண்டும் நேற்று காலை தேடுதல் துவக்கப்பட்டு நெடு நேரமாக தேடிய உடல் மாலை 3 மணி அளவில் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். உடல் மீட்கப்படுமா என்ற நிலையில் அவரது உறவினர்கள் காலை முதலே ஏரிக்கரையில் அமர்ந்து இருந்ததும் அக்கிராம மக்களும் அவர்களுக்கு அவ்வப்போது ஆறுதல் தெரிவித்து வந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.