ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கும் பணி!
ஆழ்துளை கிணறு
பெரணமல்லூர் பேரூராட்சியில் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி மனு அளித்தனர். பெரிய ஏரியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் இருந்த ஆழ்துளை கிணறுகளில் புதிய மின் மோட்டார் மற்றும் பைப் லைன் இணைப்புகளை மாற்றி சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் முனுசாமி தகவல் தெரிவித்தார்.
Tags
Next Story