பயண சீட்டு எடுக்காமல் பேருந்தில் போதை ஆசாமி ரகளை

பயண சீட்டு எடுக்காமல் பேருந்தில் போதை ஆசாமி ரகளை
பேருந்தில் ரகளை 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்தில் பயணசீட்டு எடுக்காமல் ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கோட்டை நோக்கி அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் இருந்து ஏறிய அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்ல வேண்டுமென கூறியுள்ளார். நடத்துனர் பயணச்சீட்டு எடுக்க சொன்ன நிலையில் பயணச்சீட்டு எடுக்காமல் தகராறில ஈடுபட்டுள்ளார். பேருந்து சென்று கொண்டிருந்த போது வாக்குவாதம் நடந்துள்ளது.பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள லட்சுமியாபுரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது பேருந்தை நிறுத்தசொல்லிய போதை ஆசாமி கீழே இறங்கி கல்லை எடுத்து பேருந்து ஜன்னல் ஓரத்தில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்தினார்கள் பொதுமக்களுடன் சேர்ந்து போதை ஆசாமியை விரட்டி பிடித்தனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணிகண்டனை நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story