போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

திருச்செங்கோட்டில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வருவாய் துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி கொடி அசைத்து துவங்கி வைத்தார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பொருள் உபயோகிக்க கூடாது 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் திருச்செங்கோடு வருவாய் துறையினரும் இணைந்து போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்செங்கோடு மகாதேவ வித்யாலயம் பள்ளியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார், பேரணி வாளரை கேட்டு வழியாக வந்து வேலூர் சாலையில் மீண்டும் பள்ளியை அடைந்தது, பேரணியில் குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்கள் கூடாது 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடியில் செய்துள்ள வசதிகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த பேரணியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த், திருச்செங்கோடு வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இந்த பேரணியில் செஞ்சிலுவை சங்க மாணவ மாணவிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதைப் பொருள் குறித்தும் வாக்காளர்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்

Tags

Next Story