நாமக்கல் டிரினிடி கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
நாமக்கல் மாவட்டத்தில் போதைபொருட்கள், புகையிலை, குட்கா பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு நாமக்கல் எஸ்.பி ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கல்லூரியில் நாமக்கல் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு குழு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. "போதைப்பொருட்கள் இல்லை” என கூறுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வானது நாமக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் கல்லூரியின் போதைப்பொருள் விழிப்புணர்வு மையம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது. நாமக்கல் உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் இந்நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். நாமக்கல் நகர காவல் நிலைய கண்காணிப்பாளர் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர்கள் ராதா. செல்லதுரை, திவ்யா மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பேசினர். கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார்.
போதைப்பொருட்கள் இந்த சமுதாயத்தினையே அழிக்கும் சக்தி பல குற்றச்செயல்கள் நடப்பதற்கு இவையே மிக முக்கிய கொண்டது. காரணங்களாக அமைகின்றன. மாணவர்கள்சிலர் தெரிந்தோ, தெரியாமலோ போதைப்பொருட்களுக்கு அடிமையாகின்றனர். மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய சாதனையாளர்களாக உருவாக வேண்டுமென்றால் இது போன்ற தீயப்பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாம், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வீட்டின் அருகே உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், போதைப்பொருட்கள் யாராவது பயன்படுத்தினால் போலீஸ்க்கு தகவல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கல்லூரித் தலைவர் நல்லுசாமி, செயல் இயக்குநர் அருணா செல்வராஜ், பேராசிரியர்கள் நவமணி, சசிகலா, செந்தில்குமார், அனுராதா, ஜெயமதி. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி, உடற்கல்வி இயக்குநர் அர்ச்சனா உட்பட 650-க்கும் மேற்பட்ட மாணவியர் 70-க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் நன்றியுரை ஆற்றினார். மேலும், மாணவியர் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு பேரணியையும் மேற்கொண்டனர். இதில் நாமக்கல்- மோகனூர் சாலை வகுரம்பட்டி கிராம எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகர், மகரிஷி நகர், சிங்கிலிப்பட்டி பிரிவு பகுதி வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்பேரணி நடைபெற்றது.