போச்சம்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போச்சம்பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

போச்சம்பள்ளி காவல் துறையினர் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

போச்சம்பள்ளி காவல் துறையினர் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதை பொருள் இல்லாத முதன்மை மாவட்டமாக வர கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களது உத்தரவின் பேரில்,

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு அவர்களின் அறிவுறுத்தலின்படி, பர்கூர் காவல்துறை கண்காணிப்பாளர் பிரித்விராஜ் சௌகான் அவர்களின் வழிகாட்டுதலின்படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி அவர்களது தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் போதைபொருள் விழிப்புணர்வு பேரணியை ஏற்படுத்தினர்.

இதில் போதை பொருள் ஒழிப்பிற்கான வாசகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் இது குறித்து பேசிய போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி அவர்கள் பேசுகையில் இளம் தலைமுறையினர் வசம் எளிதில் போதை பொருட்கள் கிடைக்கும் வண்ணம் உள்ளது. இது குறித்து போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் உள்ளீடவர்கள் குறித்த தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தால்,

அவர்கள் இரகசியம் காக்கப்பட்டு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபாடுகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவர்கள் மற்றும் விற்பவர்கள் குறித்த விவரங்களையும் காவல்துறையினருக்கு தெரிவிக்க அறிவுறுத்தினார்.

மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர்கள் ரவி, பச்சமுத்து, உளவுத்துறை காவலர் ஆனந்தராஜ், உளவுத்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சேகர், சக்கரவர்த்தி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் சுதாகர், கிருஷ்ணன், மாதவன், புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், மாரத்தான் ஐ டூ கே டிரஸ்ட் போச்சம்பள்ளி மாரத்தான் கிளப் தலைவர் உதயகுமார், துணை தலைவர் ஜெய் ஏஜென்சிஸ் செந்தில் குமார், செயளாளர் சந்துரு, பொருளாளர்கள் நாகராஜ்,

சுரேஷ் ஆசிரியர் நவீன்குமார், சுதாகர், விமல் ராஜ், சண்முகம், விஜயன், கோவிந்தராஜ், சதாசிவம், கிராம நிர்வாக அலுவலர் ராகேஷ் சர்மா, காவலர்கள் ராமகிருஷ்ணன், ராஜசேகர், அன்பரசு, திருமால், முரளி, சக்கரவர்த்தி, வாசுகி, மகாராணி, முருகம்மாள் மற்றும் போலீஸார் மாரத்தான் குழுவினர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story