திண்டிவனத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

திண்டிவனத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

திண்டிவனத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது


திண்டிவனத்தில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்திலுள்ள சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் சார்பாக நேற்று காலை போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை, டவுன் டி.எஸ்.பி., சுரேஷ்பாண்டியன் துவக்கி வைத்தார் .பேரணிக்கு கல்லுாரி முதல்வர் வீரமுத்து தலைமை தாங்கினார்.நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் போதைக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். பேரணி இறுதியாக காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

Tags

Next Story