போதைப்பொருள் குறித்த விழிப்புணர் பயணம் - பெரம்பலூரில் வரவேற்பு

போதைப்பொருள் குறித்த விழிப்புணர் பயணம் பெரம்பலூரில் வரவேற்பு.
போதை பொருள் புகையிலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும், திருச்சி முதல் சென்னை வரை மாணவர்களின் ஸ்கேட்டிங் பயணம், பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி, அதனை எடுத்துரைக்கும் வகையில் திருச்சியில் இருந்து சென்னை வரை 60, மாணவ, மாணவிகள் ரோலர் ஸ்கேட்டிங், பயணம் மேற்கொண்டனர் மே 31ஆம் தேதி காலை திருச்சியில் தொடங்கி, ஜூன் இரண்டாம் தேதி சென்னையில் முடிவடையும். இந்த சாலை வழியான ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம், பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் வந்த ரோலர் ஸ்கேட்டிங் மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில், அதன் மாவட்டத் தலைவர் அன்புதுறை செயலாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு உற்சாகப்படுத்தும் விதமாக பெரம்பலூர் ரோலர் ஸ்கேட்டிங் மாணவர்கள் சிறிது தூரம் அவர்களுடன் ரோலர் ஸ்கேட்டிங் பயணம் சென்று வழி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ரோலர்ஸ் கேட்டரிங் அசோசியேசன் பொருளாளர் சீனிவாசன், முன்னாள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், பயிற்சியாளர்கள் முரசொலி மாறன் கிஷோர், பூமிநாதன், உள்ளிட்ட ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story