சட்ட பணிகள் குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப்பணி குழு சார்பில் போக்சோ,சைபர் கிரைம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் தாராபுரம் மகாராணி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமை தாங்கி பேசியல் சட்டம் உதவி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது. மேலும் போதைப்பழக்கம் வீட்டையும்,நாட்டையும் கெடுக்கும். ஆகவே போதை இல்லாத சமுதாயம் இருந்தால் தான் குடும்பமும், நாடும் முன்னேறும் நல்ல புத்தகங்களை படியுங்கள், விளையாடுங்கள், மனதை நல்வழிப்படுத்துங்கள், ஒழுக்கத்தை கடைப்பிடியுங்கள் என்றார்.தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிபதி பாபு கூருகையில் பெண்களின் மனதை கவர பெற்றோரை கஷ்டப்படுத்தி வற்புறுத்தி பல லட்சங்களில் வாகனம், செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பது பெரிகி வருகிறது. அவ்வாறு செய்யாமல் நன்கு படித்து தொழில் வாயிலாக பெரிய பதிவில் அமர வேண்டும். மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் ன,தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் உடலை நன்கு வைத்திருக்க வேண்டும் ன.ஆகவே போதை இல்லாத சமுதாய உருவாக்க வேண்டும் என்றால் நாம் நமக்கு சுய ஒழுக்கத்துடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றார். இதுபோல் வழக்கறிஞர் சித்ரா பாண்டே தாராபுரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். முகாமில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story