பேராவூரணி கல்லூரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு கூட்டம்
போதையில்லா தமிழகம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வெங்கடேஸ்வரா கல்வியில் கல்லூரி மற்றும் வெங்கடேஸ்வரா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம், காவல்துறை, ராணியம்மாள் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், கல்லூரி வளாகத்தில்,
போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில், போதைப்பொருட்களின் தீமை குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் எம்.கே ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினார்.
காவல்துறை உதவி ஆய்வாளர் புகழேந்தி, சமூக ஆர்வலரும், கல்வியாளருமான எஸ்.கௌதமன் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர். பொறியாளர் சர்வம் சரவணன் கலந்து கொண்டு,
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். விழாவில், போதைத் தடுப்பு சம்பந்தமான புகார் அளிப்பதற்கு 10581 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.