அரசுப்பள்ளி சேதம்
அரசு பள்ளி
அரசுப் பள்ளியை சேதப்படுத்திய கும்பல்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்ப பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. நேற்று காலை பள்ளி திறக்கப்பட்ட போது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகத்தில் பல பகுதிகளில் மது பாட்டில்கள் உடைந்து சிதறி கடந்து கிடந்தது.
மேலும் பல வகுப்பறைகளின் கதவுகள், ஜன்னல் கதவுகளை உடைத்து, சேதப்படுத்தப்பட்டு இருந்தது. தலைமை ஆசிரியரின் அறையும் உள்ள ஆசிரியர் ஓய்வு அறைகளும் சேதப்படுத்தப்பட்டு, அந்த அறைகளுக்கு உள்ளேயும் மது பாட்டில்கள் சிதறி கிடந்தன.
இதையடுத்து தலைமை ஆசிரியர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
அப்போது பள்ளி வளாக அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்தி, முற்றிலும் இயங்காதவாறு செய்து இந்த சம்பவம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


