போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை சார்பில், குரும்பலூர் போரூராட்சியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் லதா தலைமையில் குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டு பேசிய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனை உபயோகிப்பவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் எவ்வாறு பாதிக்கப்டுகின்றனர் என்றும் எடுத்துரைத்தார்கள்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாதல் மற்றும் மதுவிற்கு அடிமையாதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் வாழ்வியலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பகுதியில் சட்டவிரோதமாக கள்ளசாராயம் காய்ச்சுதல், விற்றல் மற்றும் ஊறல் போடுதல் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையிடம் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிப்பவர்களின் இரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார். குரும்பலூரில் பெரம்பலூர் அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் தொடங்கிய பேரணி முக்கிய வீதி வழியாகச் சென்று குரும்பலூர் சிவன் கோவில் பகுதியில் முடிவடைந்தது.

Tags

Next Story