பள்ளி மாணவர்களின்‌ போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பள்ளி மாணவர்களின்‌ போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

போதைப்பொருள் எதிர்ப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் காவல்துறை சார்பில் போதை பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி சார்லஸ் சாம் ராஜாதுரை தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.போதை பொருட்களுக்கு எதிராக மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது. பேரணியில் பள்ளி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டு

பொதுமக்களை கவரும் வகையில் போதைப்பொருட்களுக்கு எதிராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் காஞ்சிபுரம் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதீஷ்குமார்,

சுரேஷ்குமார் குழந்தை நல மைய அலுவலர் அமுதா,மற்றும் துறை அலுவலர்கள் மற்றும் ஆகியோர் பங்கேற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதேபோன்று பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story