தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு உள்ளது - சி.வி சண்முகம் பேட்டி

தமிழகத்தில் போதை பொருள் அதிக அளவு உள்ளது - சி.வி சண்முகம் பேட்டி

மனித சங்கிலி போராட்டம்

விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார். அத‌ன்படி விழுப்புரம் புதுச்சேரி சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்படுத்திய விடியா தி.மு.க அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுக அரசு எதிராகவும் காவல்துறை எதிராகவும் பாதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்: போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளார். டிஜிபியிடம் பரிசு பெறுகிறார். இது கண்டிக்கத்தக்கது. ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவராகவும் முன்னாள் முதல்வருக்கு எதிராக இருந்த எடப்பாடி யார் தலைமையில் நாங்கள் சொல்லி வருகிறோம். ஆனால் இதை இந்த ஸ்டாலின் அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே தலை குணிவு ஏற்பட்டது.

மேலும் காவல்துறை அதிகாரி உடந்தையாக இருப்பதாக எங்களுக்கு சந்தேகம், உளவுத்துறை போலீசார் உதயநிதி ஸ்டாலின் பின்னால் மட்டுமே சுற்றி வருவதாகவும் இவர்கள் எந்த ஒரு தகவலும் பொறுக்காத காரணமாகவே பல இடத்தில் இது போன்ற கஞ்சா குற்றம் போன்ற போதைப் பொருட்கள் அதிக அளவில் பரவி வருகின்றன. இதனால் படிக்கின்ற இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி அவர்கள் சீர் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக இது சம்பந்தமாக யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என நாங்கள் தெரிவித்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து மனு அளிப்பது பிறகு கிட்டத்தட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான பஞ்சாப் போன்ற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது. இவ்வளவு நாளாக காவல்துறை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. தற்பொழுது இந்த செயல் விரைவாக நடைபெறுகிறது அப்பொழுது யார் எடுக்கலாம் இதில் தொடர்பு இருப்பது என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக ஜாபர்சாதிக் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story