முருங்கைக்காய் விலை வீழ்ச்சி - பொதுமக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி உழவர் சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகம் எதிரில் அமைந்துள்ளது தர்மபுரி உழவர் சந்தை இங்கு தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் விளைவிக்கப்படும் அத்தியாவசிய காய்கறிகள் விவசாயிகள் மூலம் நேரடியாக கொண்டுவரப்பட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் முருங்கைக்காய் விலை தொடர்ந்து ஒரு மாத காலமாக ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந் தது. இதனால் முருங்கைக் காய் விற்பனை மந்தமாகவே இருந்து வந்தது. முருங்கைக் காய் வறுத்து குறைந்து காணப் பட்டதால் அதன் விலை கூடுதலாகவே இருந்து வந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக தர்மபுரி சுற்றுவட் டார பகுதியில் இருந்து தர்மபுரி உழவர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்து விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று காலை உழவர் சந்தை விலை பட்டியல் நிலவரப்படி தர்மபுரி உழவர் சந்தை மற்றும் முருங்கைக்காய் ரூ.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை குறைந்துள்ளதால் முருங்கைக் காய் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story