முருங்கைக்காய் கிலோ ரூ.100 க்கு விற்பனை

முருங்கைக்காய் கிலோ ரூ.100 க்கு விற்பனை

முருங்கைகாய்


முருங்கைக்காய் கிலோ ரூ.100 க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் நாசிக் முருங்கைக்காய் கிலோ ரூ.100 க்கு விற்பனையானது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கப்பலப்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது. சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக முருங்கை விளைச்சல் பாதிக்கப்பட்டது.

இதனால் உள்ளூர் பகுதிகளிலிருந்து முருங்கை வரத்து குறைந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் முருங்கை விளைச்சல் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தினமும் லாரிகளில் முருங்கை கொண்டுவரப்படுகிறது. நாசிக் முருங்கையின் தரம் அதிகமாக உள்ளதால் கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது. உள்ளூர் பகுதிகளை விளைந்த செடி முருங்கை கிலோ ரூ.55 க்கு விற்றது.

Tags

Next Story