ஆலங்குடி அருகே மது போதையில் தாக்குதல்: 5பேர் கைது

ஆலங்குடி அருகே மது போதையில் தாக்குதல்: 5பேர் கைது

ஆலங்குடி காவல் நிலையம்

ஆலங்குடி அருகே மது அருந்தியதை கண்டித்தவரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதியை சேர்ந்தவர் அரங்குளநாதன்(50). இவர் எம்ஜிஆர் நகர் செல்லும் சாலையில் உள்ள குடிதாங்கி குளத்தில் குளிப்பதற்காக நேற்று சென்றார். அப்போது குளத்தின் கரையில் அமர்ந்து சிலர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அரங்கு னநாதன், மதுபாட்டிலை குளக்கரையில் வீசாமல் கையுடன் எடுத்து செல்லுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அரங்குளநாதனை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அரங் குளநாதன் அளித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட கலைஞர் காலனியை சேர்ந்த அழகுமுருகன் (28), சுரேஷ் (19), ஜீவானந்தம் (24), ஆதிகேசவன் (19), சின்னத்துரை (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story