குடிபோதையில் போலீஸாரை தாக்கிய நபர் கைது

குடிபோதையில் போலீஸாரை  தாக்கிய நபர் கைது

 சங்ககிரி அருகே குடிபோதையில் போலீசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

சங்ககிரி அருகே குடிபோதையில் போலீசாரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த புள்ளாக்கவுண்டம்பட்டி அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவரை தேவூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் கண்டித்தபோது போலீசாரையே தாக்கிய ஆயுள் தண்டனை அனுபவித்த கைதி ஆனந்தன் என்பவரை தேவூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை..

சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் கோவிந்தன்காட்டுவலசு பகுதியில் வசித்து வரும் விசைத்தறி கூலி தொழிலாளி ஆனந்தன் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தேவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தேவூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் மயில்சாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட ஆனந்தனை போலீசார் எச்சரிக்கை விடுத்து கண்டித்தபோது போலீசார் இருவரையும் ஆனந்தன் தாக்கியுள்ளார்.

இது சம்பந்தமாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் கொடுத்த புகாரின் பேரில் தேவூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போலீசாரை தாக்கிய ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆனந்தன் ஏற்கனவே தேவூர் காவல் நிலையத்தில் கடந்த 2009ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து ஒரு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story