அரசு மருத்துவமனையில் போதையில் ரகளை - கண்டுகொள்ளாத காவலர்கள்

அரசு மருத்துவமனையில் போதையில் ரகளை - கண்டுகொள்ளாத காவலர்கள்
ரகளையில் ஈடுபட்ட வாலிபர் 
மானாமதுரை அரசு மருத்துவமனையில் போதையில் வாலிபர் ரகளையில் ஈடுபட்ட நிலையில் காவலர்கள் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அடிக்கடி போதையில் போலீசார் முன்பே அட்ராசிட்டி செய்யும் நபர்களால் மருத்துவமனை ஊழியர்கள் மிரண்டு வருகின்றனர். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் 800க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதித்யன் என்பவர் டூவீலர் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக வந்த போது அவரது உறவினர் ரமேஷ் என்பவர் குடிபோதையில் மருத்துவமனையின் உள்ளே சென்று அட்ராசிட்டி செய்து அங்கிருந்தவர்களை மிரண்டு ஓட செய்தார். மேலும் அவரது உறவினரான ஆதித்யனை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்ப டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் முயற்சி எடுத்துக் கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தி போதையில் தள்ளாடியபடி ஊழியர்களை வேலை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருந்தார்.

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்கு போலீசார் வந்த பிறகும் போலீசாருக்கு முன்பே போதை வாலிபர் மீண்டும் அட்ராசிட்டி செய்து மருத்துவமனையில் ரகளை செய்து மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாதவாறு தொந்தரவு செய்து கொண்டிருந்தார். பின்னர் போலீசார் அவரை விருந்தாளியை போல் அழைத்துக் கொண்டு சென்றனர்.

Tags

Next Story