வறண்டு காணப்படும் ஏரி - பருவ மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்

வறண்டு காணப்படும் ஏரி - பருவ மழைக்காக காத்திருக்கும்  விவசாயிகள்

நீரின்றி காணப்படும் ஏரி  

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆரப்பாக்கம் ஏரி நீரின்றி இருப்பதால் பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஆரபாக்கம் பகுதியில் பொதுப்பணித் துறை ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் பாசனத்தை நம்பி 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது மாவட்டத்தில் ஒரு சில ஏரிகளை தவிர மற்ற அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதே போல, இந்த ஏரியும் நிரம்பியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இரு தினங்களில் துவங்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை துவங்கினால் தான் அடுத்த போகத்திற்கான விவசாய தொழில் துவங்கப்படும் என, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


Tags

Next Story