தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே உலர்க்களம் - ஆட்சியரிடம் கோரிக்கை

வேப்பந்தட்டை அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே உலர்க்களம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தில் மருத்துவமனை மற்றும் குடிநீர் கிணறு அருகே உலர்களம் அமைப்பதற்காக டெண்டர் போடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கிய நிலையில், அந்த இடத்தில் உலர்க்களம் அமைக்கக் கூடாது என்றும், மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது தேர்வு செய்த இடத்திலேயே உலர்க்களம் அமைக்க வேண்டும் என்று முன்னாள் ஊராட்சி தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சிலர் ஆதரவு தெரிவித்தனர், இதற்காக இரு தரப்பும் ஆட்சியரிடம் நேரில் வந்து கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தன்னை அவதூறாக பேசியதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை புகார் தெரிவித்திருந்தார். இ

து குறித்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேட்டுப்பாளையம் கிராமத்தில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் வேண்டுமென்றே பிரச்சனை செய்வதாகவும், அதிகாரிகள் மீதும் கட்டுமான பணி மேற்கொள்பவர் மீதும் தேவையற்ற புகார்களை தெரிவித்து வருவதாகவும் கூறி இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தற்போது தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே பணிகளை துவங்கி உலர் களம் அமைத்து தரவேண்டும் என்று , மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாகதெரிவித்தனர்.

Tags

Next Story