கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
காவல்துறை விசாரணை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்தவர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காக்கழனி பிள்ளையார் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் கருணாநிதி வயது 54 . இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் கருணாநிதி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி மதியம் 12 மணிக்கு மன உளைச்சலில் இருந்த கருணாநிதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சையில் இருந்த கருணாநிதி சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக கருணாநிதி மகன் பாக்கியரசன் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story