கனமழையால் பூக்கள் விலை கிடுகிடுவென சரிவு

வேப்பனப்பள்ளி, சூளகிரி சுற்றுவட்டார தொடர் கனமழையால் செண்டுமல்லி பூக்கள் விலை கிடுகிடுவென சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி,சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் செண்டுமல்லி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வெயில் தாக்கத்தின் காரணமாக பூக்கள் விலை கிடுகிடுவினை விலை அதிகரித்திருந்தது. அப்போது ஒரு கிலோ செண்டுமல்லி 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தற்போது கடந்த 15 நாட்களாக இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் பூக்கள் விலை கிடுகிடு சரிந்துள்ளது. தற்போது ஒரு கிலோ செண்டுமல்லி ரூ.15 முதல் 30 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பூக்களை அறுவடை செய்யமால் தோட்டத்திலேயே விட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளும் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களுக்கு செண்டுமல்லி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story