தொடர்மழை காரணமாக முருங்கை வரத்து குறைவு
முருங்காய் வரத்து குறைவு
முருங்கை பழுப்பு நிறத்தில் இருப்பதால் விலை குறைந்துள்ளது
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளான ஈசநத்தம்,தடா கோவில், மலைக்கோவிலூர், கோவிலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாகவும், பனி காரணமாகவும் முருங்கை மரங்களை சுற்றி பூச்சிகள் தாக்குதல் உள்ளது. இதனால், முருங்கை மரத்தில் இலைகள் உதிர்ந்து, முருங்கை காய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், மொத்த விற்பனை சந்தைக்கு முருங்கை வரத்தும் குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் முருங்கை காய்களும் பழுத்து பழுப்பு நிறத்தில் இருப்பதால், முருங்கைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது முருங்கை காய் கிலோ 60 ரூபாய் முதல் விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு முருங்கைக்காய் 5- ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஆக மொத்தத்தில் முருங்கைப் வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story