வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை குறைவு

வரத்து அதிகரிப்பால்  பூக்கள் விலை குறைவு

 பூ மார்க்கெட்

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை பாதியாக சரிந்துள்ளது.

திண்டுக்கல் நகரின் மையப் பகுதியில் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு சுற்று வட்டார பகுதிகளான கிராமங்களில் இருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் விவசாயிகள் ஆர்வமாக பூக்கள் சாகுபடி செய்தனர். தற்போது அதிக அளவில் விளைச்சல் கண்டு மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை பாதியாக சரிந்துள்ளது.

ரூபாய் 900க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை தற்போது ரூபாய் 400க்கு மட்டுமே விலை கேட்கப்பட்டது. இதேபோல் ரூபாய் 60க்கு விற்பனையான அரளி ரூபாய் 30-க்கும், ரூபாய் 120 க்கு விற்பனையான கோழிகொண்டை ரூபாய் 60க்கும் கனகாம்பரம் ரூபாய் 300, முல்லை ரூபாய் 150, சம்பங்கி ரூபாய் 15, செண்டுமல்லி ரூபாய் 60, ஜாதிப்பூ ரூபாய் 300 என்ற விலையில் விற்பனையானது.

Tags

Next Story