சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய வசதி இல்லாததால்  பொது மக்கள் சிரமம்

சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய வசதி இல்லாததால்   பொது மக்கள் சிரமம்
காங்கேயம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய வசதி இல்லாததால்  பொது மக்கள் சிரமம் உள்ளதாக குற்றச்சாட்டுகின்றனர்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினசரி அளவில் 50 முதல் 100 பத்திரங்கள் வரை பதியப்பட்டு வருவதாக பத்திரம்‌ பதிய வரும் பொதுமக்கள் கூறுகின்றனர். இங்கு காலை அலுவலகம் திறக்கும் நேரம் காலை 9 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை பொதுமக்கள் அதிகம் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் முக்கிய தினங்கள், திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என நன்நாட்களில் பத்திரப்பதிவு அதிகமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் நிலம், வீடு, காடு ஆகியவற்றை விற்பனை செய்யவும், வாங்கவும் காங்கேயம் சார்பதிவாளர் அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு போதிய‌ இட வசதி இல்லாததால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காங்கேயம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் இருந்த இட வசதி வாடகை கொடுத்த தற்போது செயல்படும் அலுவலகத்தில் இல்லை. மேலும் குடிநீர், வாகன நிறுத்துமிடம், பொதுமக்கள் அமரும் இடம் போன்றவைக்கு மாற்று வழிகளை தேட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் முக்கிய தினங்களில் பத்திரப்பதிவிற்கு வரும் பொழுது அலுவலகத்தில் அமர்வதற்கு இடமில்லாமல் வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிற்க வேண்டியுள்ளது. மேலும் இவை மழை காலங்களில் சாத்தியமில்லை. மேலும் அலுவலக வாடகைக்கு அரசு பணம் செலவிட்டும் குறைபாடுள்ள இடத்தை அலுவலகமாக தேர்வு செய்திருக்க அவசியமில்லை எனவும், உடனடியாக போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு கூறினர். எனவே உடனடியாக காங்கேயம் திருப்பூர் சாலையில் தற்காலிகமாக இயங்கி வரும் சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story