மழையில்லாததால் கருகிய புற்கள்... விவசாயிகள் கவலை !

சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழையில்லாததால் புற்கள் கருகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் வாட்டி வரும் நிலையில் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த பல்வேறு வகையான பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கருகியது. மேலும் மழையின்றி வறண்ட வானிலை காரணமாக கால்நடைகளுக்கு கூட பயன்படுத்தப்படும் புல் கருதி காணப்படுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை எவ்வாறு வளர்ப்பது என்று விவசாயிகள் தவித்து வருவதோடு, பெரும் கவலை அடைந்துள்ளனர்.

Tags

Next Story