வரத்து குறைவால் வரமிளகாய் விலை கடும் உயர்வு

வரத்து குறைவால் வரமிளகாய் விலை கடும் உயர்வு

கெங்கவல்லி வாரச்சந்தையில் ஒரு கிலோ வரமிளகாய் ரூ.300 வரை கடுமையாக விலை உயர்த்துள்ளது. 

கெங்கவல்லி வாரச்சந்தையில் ஒரு கிலோ வரமிளகாய் ரூ.300 வரை கடுமையாக விலை உயர்த்துள்ளது.

கெங்கவல்லி :சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வாரச்சந்தையில் ஒரு கிலோ வரமிளகாய் ரூ.300 வரை விற்பன கெங்கவல்லி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் வரமிளகாய் விலை கடுமையாக உயர்த்துள்ளது. கெங்கவல்லி ஆத்தூர் மல்லியக்கரை தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வரசந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவு வரமிளகாய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக வரமிளகாயின் வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது 2 மாதங்களுக்கு முன்பு தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ ரூ 160 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்ட சீனி வரமிளகாய், தற்பொழுது ரூ. 240 முதல் ரூ.280 வரை விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோ ரூ 100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட ஆந்திரா குண்டு வரமிளகாய் தற்பொழுது ரூ 200 முதல் ரூ.220 வரையும், ரூ 150 முதல் ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்ட தமிழ்நாட்டு குண்டு வரமிளகாய் தற்பொழுது ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது தொடர்மழை காரணமாக தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, மகாராஷ்டிராவில் மிளகாய் விளைச்சல் குறைந்தது. இதனால் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படும் வரமிளகாய் வரத்து சரிந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Tags

Next Story