மின் தட்டுப்பாட்டால் தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மின் தட்டுப்பாட்டால் தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

மின் தட்டுப்பாட்டால் தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் மனு.

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் தட்டுப்பாட்டால் தண்ணீர் இறைக்க முடியாமல் காய்ந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆட்சியரிடம் விவசாயிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் பலர், காய்ந்த பயிர்களுடன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை சந்தித்து, மனு அளித்தனர் அதில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், தம்பை, தேவையூர் வல்லாபுரம், பிரம்மதேசம், அ.குடிக்காடு சாலை, VRSS புரம், அழகாபுரி, சிறுவயலூர், சாத்தனவாடி, மேட்டுப்பாளையம், ஆகிய கிராமங்களுக்கு மங்களமேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது,

இதில் தற்போது மங்களமேடு துணை மின் நிலையத்தில் திறன் மாற்றிகள் பழுதடைந்ததால் தொடர்ந்து ஒரு வார காலமாக மின்சாரம் இல்லாமல் மக்காசோள பயிர்களுக்கு தண்ணீர் இறைக்க முடியாததால் அனைத்து மக்காச்சோள பயிர்களும் காய்ந்து விட்டது, ஆகவே மக்காசோள பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்த மனுவை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர், மனுவைப் பெற்ற ஆட்சியர், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story