கோடை மழையால் உளுந்து விளைச்சல் அமோகம்

கோடை மழையால் உளுந்து விளைச்சல் அமோகம்

உளுந்து சாகுபடி 

கீழ்வேளூர் அருகே கோடை மழையால் அறுவடையின் போது உதிர்ந்த விதைகளில் இருந்து தானாக முளைத்து உளுந்து செடிகள் செழித்து வளர்ந்துள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டு பரவலாக கோடை மழை பெய்தது கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த கோடை மழையால் கடந்த ஏப்ரல் மாத மாதம் அறுவடை செய்யப்பட்ட உளுந்து செடிகளில் இருந்து உதிர்ந்த விதைகள் நாகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கீழ்வேளூர் அருகே புறவழிச்சாலையில் கீழ்வேளூர் கூத்தூர் இடையே உள்ள வயல்வெளிகளில் தானாக முளைத்து செழிப்பாக காணப்படுகிறது விவசாயிகள் விதைப்பு செய்தால் முளைத்ததை விட தானாக முளைத்த இந்த பயிர்கள் வயல்களில் பரவலாக முழு பகுதியிலும் இடைவிடாமல் முளைத்துள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்

Tags

Next Story