கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடல்: பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்ற பஸ்

கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் மூடல்: பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்டு சென்ற பஸ்

ரயில்வே கேட் மூடியதால் பொதுமக்களை பாதிவழியிலேயே இறக்கி விட்டு சென்ற பஸ்

நான்கு வழி சாலைக்காக கண்டமங்கலம் ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்களை பாதிவழியிலேயே பேருந்துகள் இறக்கி விட்டு செல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுவை அடுத்த தமிழக பகுதியான கண்டமங்கலத்தில் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் குறுக்கே ரெயில்வே துறை சார்பில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதால், சாலையை தடை செய்து ரெயில்வே கேட் மூடப்பட்டது. புதுச்சேரி யில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து தனியார்பஸ் ஒன்று நேற்று மதியம் கண்டமங்கலம் தாண்டி மதகடிப்பட்டு வரை செல்லும் என்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. கண்டமங்கலம் வந்ததும் பஸ் மாற்று வழியில் செல்லாமல் நின்றது.

இனிமேல் பஸ் மதகடிப்பட்டு செல்லாது. அதனால் பஸ்சில் உள்ள வர்கள் இங்கேயே இறங்கி ரெயில்வே கேட் கடந்து அந்தப் பகுதி யில் நிற்கும் பஸ்சில் ஏறி மதகடிப்பட்டுக்கு செல்லுங்கள் என்று கூறி அடாவடியாக பயணிகளை இறக்கி விட்டனர். மறுபடியும் அந்த பஸ் புதுச்சேரியை நோக்கி சென்று விட்டது. இதனால் பஸ் சில் பயணம் செய்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து கண்டமங்கலம் காவல் நிலையம் அருகில் நீண்ட நேரம் காத்திருந்து பிறகு பஸ்சில் ஏரி மதகடிப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'புதுச்சேரியில் பயணிகளை பஸ்சில் ஏற்றும் போது மாற்றுப்பாதையில் மதகடிப்பட்டு வரை செல்லும் என பொய் சொல்லி முழு டிக்கெட் பணம் வசூல் செய் கிறார்கள். பிறகு கண்டமங்கலத்தில் பாதியில் இறக்கிவிட்டு செல் வது எந்த விதத்தில் நியாயம்?. இப்படி பொதுமக்களை துன்புறுத் தும் பஸ் டிரைவர், நடத்துனர் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல கண்டமங்கலம் மேம்பாலம் பணி முடியும் வரை பொதுமக்கள் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்வதற்கு அரசு முழு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றனர்.

Tags

Next Story