தரைப்பாலம் உடைந்ததால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

இராஜபாளையம் அருகே உள்ள வாகைகுளம்பட்டியில் தரைப்பாலம் உடைந்து கண்மாய் நீர் அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள வாகைகுளம்பட்டி பகுதியில் ராமலிங்காபுரம் பஞ்சாயத்து கீழராஜகுலராமன் பஞ்சாயத்து பகுதிகளில் கடந்த மாதம் பெய்தகனமழையில் காணக்குளம் கண்மாய் மேலகுளம் . கீழ குளம் கண்மாய் .நத்தம் பட்டி கண்மாய் என பல்வேறு கண்மாயில் நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் பாலம் உடைந்தது. இந்த நிலையில் சம்சிகாபுரம் - ராமலிங்கபுரம் சாலையில் தற்க்காலிக பாலம் அமைத்தனர் இந்நிலையில் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் தரைப்பாலம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குடியிருப்புகள் பகுதியில் புகுந்ததால் சுமார் 60க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை சாத்தூர் சட்டமன்ற உருப்பினர் ரகுராம் பார்வையிட வரவில்லை என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Tags

Next Story