பயணிகள் வருகை அதிகரிப்பால் கண்காணிப்பு பணிகள் தீவிரம்.
கணகாணிப்பு பணி
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் பிற மாநில தொழிலாளிகள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்து அனுப்புகின்றனர்.
பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வெளியே வைத்து வர அறுவுறுத்தி வருகின்றனர். மேலும் ரயில் நிலைய நடைமேடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கபட்டு வருகிறது.
மேலும் சாதாரன உடைகளிலும் ரயில்வே நடைமேடைகளில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.தீபாவளி விடுமுறையை முன்னிட்டு கோவையில் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.